கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலத்திலிருந்து இதுவரை அறியப்படாத 69 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஐஎல்ஐ (சளிக்காய்ச்சல் போன்ற நோய்) மற்றும் சாரி (கடுமையான சுவாச தொற்று) இந்த சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
சளிக்காய்ச்சல் போன்ற நோய் அல்லது கடுமையான சுவாச தொற்றின் பரிசோதனையில் பெரும்பாலான நேர்மறையான சம்பவங்கள் மேலதிக பரிசோதனைக்குப் பிறகு அவை பிற நோய் சங்கிலியுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சளிக்காய்ச்சல் போன்ற நோய் அல்லது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது, மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்துவதாக அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.