கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுக்க விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் 23-வது நாளான நேற்று வரை இந்த ஆணைக்கு இணங்காதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கவலையை வெளிப்படுத்திய அவர், உறவினர்களைப் பார்ப்பது போன்ற செயல்களை மக்கள் இன்னும் செய்து வருவதாகக் கூறினார்.
உண்மையில், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை கூட அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு எதிராக செயல்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 13 விழுக்காடு அதிகரித்து 454-ஆக அதிகரித்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.