Home One Line P1 ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!

ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரம்லான் மாதத்தின் போது இணைய வாடகை வண்டி (e-hailing), வாகனம் வழி விற்பனை (drive thru) மற்றும் முன்பதிவு செய்து உணவுகளைப் பெற்று கொள்வது அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவது தொடர்பான அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தில் இந்த விடயம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் ஒரு சந்தை அமைத்தால், எடுத்துக்காட்டாக, 50 சந்தை இருக்கும் இடத்தில், இணைய வாடகை வண்டிகள் குழுவாக குறிப்பிட்ட தருவிப்புகளை எடுக்க வருவார்கள். அது சாத்தியமில்லை, ஏனெனில் இதுபோன்ற சந்தை மற்றும் சாவடிகள் அனுமதிக்கப்படாது.”

“ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்படும் சாதாரண இணைய வண்டி வணிகம் வழக்கம் போல் தொடரும்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.