Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: அரசாங்க அனுமதியின்றி வணிக, உற்பத்தித் துறைகள் செயல்பட முடியாது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: அரசாங்க அனுமதியின்றி வணிக, உற்பத்தித் துறைகள் செயல்பட முடியாது!

501
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எந்தவொரு வணிகம் மற்றும் உற்பத்தித் துறையும் அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இயங்கத் தொடங்க முடியும் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் ஒப்புதல்களைப் பெறவில்லை என்றாலும், வணிகத் தொடக்கங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அங்கீகரிக்கப்படாத சேவைகளால், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை முதல் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை திரும்பப் பெறப்படவில்லை. மூன்றாவது ஆணை (ஏப்ரல் 15 முதல் 28 வரை) தொடர்கிறது. ” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“சாலையில் பல வாகனங்கள் இருப்பது, மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு வாகனத்தையும் பல சாலைத் தடுப்புகளில் காவல்துறையினர் தீவிரமாக பரிசோதித்து வருவதாகவும், இது நெரிசலை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.