கோலாலம்பூர்: ஓசிபிசி மற்றும் முவாமாலட் வங்கிக்கு அடுத்ததாக அமைந்துள்ள மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி இரயில் போக்குவரத்து நிலையத்திற்கான அனைத்து நுழைவாயில்களையும் மூடுவதாக ரெபிட் ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மஸ்ஜிட் இந்தியா பகுதியைச் சுற்றிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக அது மூடப்பட்டுவதாக இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்தது.
“இருப்பினும், மஸ்ஜிட் ஜாமேக்குக்கு அடுத்ததாக அமைந்துள்ள நுழைவாயில்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் செயல்படும் நேரத்திற்கு ஏற்ப இரயில் சேவை செயல்படும்”.
“கெளானா ஜெயா, அம்பாங் அல்லது ஸ்ரீ பெட்டாலிங் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் மஸ்ஜிட் ஜாமேக் இரயில் நிலையத்தில் மட்டுமே இரயில் மாற்றத்தை செய்ய முடியும். ”என்று அது கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
மேல் விபரங்களுக்கு, சமூக ஊடக கணக்கைப் பார்வையிடவும் அல்லது 03-7885 2585 என்ற எண்ணில் அழைக்கலாம்.