Home கலை உலகம் நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்- சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு

நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்- சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு

613
0
SHARE
Ad

sarathசென்னை, ஏப்ரல்11- தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கும் இயக்குனர் தேர்தல் நடந்தது.

இதில் போட்டியிட நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு மற்றும் கானா உலகநாதன், எம்.என்.கே.நடேசன், கே.ஆர்.செல்வராஜ், சுகுணா வீரமணி ஆகிய 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

வேறு யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பத்து பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நடிகர், நடிகைகளுக்கு கடந்த பல வருடங்களாக வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்து வருகிறது. இதில் 140 உறுப்பினர்கள் உள்ளனர். புதிதாக மேலும் 1000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.