கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலாலம்பூர், செலாயாங் மொத்த சந்தை நான்கு நாட்களுக்கு மூடப்படும். துப்புரவுப் பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இப்பகுதியில் இருக்கும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொவிட்-19 நச்சுயிரியால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
“முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட இப்பகுதி 14 நாட்கள் முடப்படவில்லை, ஆனால் நான்கு நாட்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. இதன் மூலம் கிருமிநாசினி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.
சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து பொருட்களின் பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் கூறினார். பொது மக்கள் தொடர்ந்து அருகிலுள்ள சந்தைகளில் அவற்றைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.