Home One Line P1 சொந்த ஊரிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப விரும்புவோர் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம்!

சொந்த ஊரிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப விரும்புவோர் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம்!

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்காக வரும் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மலேசிய காவல்துறை, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் இணைந்து உருவாக்கிய ‘கெராக் மலேசியா’ பயன்பாட்டைப் பயன்படுத்தி இணையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

“இருப்பினும் இது இன்னும் ஆய்வில் உள்ளது. நடமாட்டம் தொடங்க வேண்டுமானால் மே 1- ஆம் தேதிக்குப் பிறகு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். எந்த உத்தரவாதமும் இல்லை, ஏனெனில் ஏப்ரல் 25, முதல் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.”

#TamilSchoolmychoice

“அந்த நேரத்தில் எத்தனை பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். பின்னர் சில கடுமையான இயக்க நடைமுறைகள் மற்றும் பலவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்தலாம், ”என்று அவர் கூறினார்.