Home One Line P1 மாமிசங்கள் விற்பனை செய்யும் சந்தைகள் இனி மதியம் 2 வரை திறந்திருக்கும்!

மாமிசங்கள் விற்பனை செய்யும் சந்தைகள் இனி மதியம் 2 வரை திறந்திருக்கும்!

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமிசங்களை விற்பனை செய்யும் சந்தைகள் தற்போது மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். முன்னதாக, இந்த சந்தைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொது வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ரம்லான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு காலை உணவைத் தயாரிப்பதை எளிதாக்குவதற்காக நேரத்தை தளர்த்துவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ரம்லான் மாதத்தில், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 1, 2 மற்றும் 3 ஆகியவற்றின் போது அறிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை இன்னும் நடைமுறையில் உள்ளது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முஸ்லிம்கள் நாளை வெள்ளிக்கிழமை முதல் ரம்லான் நோன்பு கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.