கோலாலம்பூர்: வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் சொந்த வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் மாநில எல்லைகளைக் கடக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 15 விழுக்காட்டு மாணவர்கள் தாங்கள் பல்கலைக்கழக வளாகங்களிலேயே தங்கப்போவதாகத் தெரிவித்துள்ளதாக அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
ஏப்ரல் 27 முதல், பல்கலைக்கழக மாணவர்கள் பச்சை மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களின் பயண நேரம் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.