Home One Line P2 கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!

கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!

656
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய ஒரு மாதத்திற்கும் மேலாவதால் பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொவிட் -19 காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வைப்பதற்காக இது நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் துறை (பொருளாதாரம்) துணை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.

“நாட்டின் நேரடி வருமான ஆதாரங்களை பல்வகைப்படுத்தும் அதே வேளையில் அந்நிய நேரடி முதலீட்டை நாட்டிற்கு ஈர்க்க அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயல்படும்.”

#TamilSchoolmychoice

“நாட்டின் உள்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பிற நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.”

“இப்போதைக்கு, பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.”

“எப்படியிருந்தாலும், மலேசியர்களின் நலன் தொடர்ந்து அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொவிட் -19 பாதிப்பின் விளைவாக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்டகால பொருளாதார மீட்பு திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக ஆர்தர் கூறினார்.

பொருளாதார மீட்பு திட்டத்தின் திட்டங்கள் கொவிட் -19- க்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும், குறிப்பாக நீண்டகால திட்டத்தில் நாட்டின் பொருளாதார, இயற்கை மற்றும் சமூக மையத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“கூடுதலாக, சுற்றுலாத் துறையிலிருந்து நாட்டின் வருமானமும் பாதிக்கப்படுகிறது. எனவே, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை நாம் அதிகம் நம்ப வேண்டியிருக்கலாம்.”

“எனவே நாங்கள் எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும், நாட்டின் நிதி நிலை மற்றும் வருவாயை முதலில் கவனிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.