Home One Line P1 துணை சுகாதார அமைச்சர், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

துணை சுகாதார அமைச்சர், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

352
0
SHARE
Ad

ஈப்போ: இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இருவருக்கும் எதிராக இன்று செவ்வாய்க்கிழமை 13 பேருடன் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

டாக்டர் நூர் அஸ்மி மற்றும் ரஸ்மான் ஆகியோர் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று ஒரு தாபிஸில் குழுவாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனிடையே, துணை சுகாதார அமைச்சருக்கும், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினருக்கும் தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி நோர்ஹிடாயாதி முகமட் நஸ்ரோ குற்றச்சாட்டை ஒரே நேரத்தில் வாசித்தபோது அக்குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.