சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று திங்களன்று 799 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும் இரண்டு இறப்புகளை அந்நாடு பதிவுசெய்தது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 14- ஆக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 1595 மற்றும் 9682 என பெயரிடப்பட்ட இரண்டு ஆண் நோயாளிகளும் ஏப்ரல் 27 அன்று இறந்ததாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிங்கப்பூரர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வரையிலும் சுமார் 528 சம்ப்வங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக்வும், இதன் மொத்த சம்பவ்ங்கள் 14,951-ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று திங்கள்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,095 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அதே நேரத்தில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.