Home One Line P1 கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!

கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்!

461
0
SHARE
Ad

ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11 முதல் 23 வரை நடத்தப்பட்ட இலக்கில், மாநிலத்தில் உள்ள கொவிட் -19 சங்கிலியை உடைக்கும் பொருட்டு 5,433 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்ட எட்டு நேர்மறையான சம்பவங்களைப் பற்றி அவர் கூறுகையில், அவற்றில் நான்கு உலு லங்காட்டில் கண்டறியப்பட்டுள்ளன என்றார். பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் ஷா அலாம் ஆகிய இடங்களில் தலா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சின் பரிந்துரைப்படி, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம், செல்ப்கேர் கிளினிக், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்டி- பிசிஆர் (RT-PCR) முறையைப் பயன்படுத்தி பராமரிப்பு மையங்கள் உட்பட வீடு வீடாக சென்று பரிசோதனைகளைச் செய்ததாக அவர் கூறினார்.

“இந்த பரிசோதனைத் தொடர் என்பது கொவிட்-19 பாதிப்பைக் கண்டறிவதில் சுகாதார அமைச்சுக்கு உதவுவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.”

“மாநிலத்தின் பொருளாதார மீட்சியில் புதிய இயல்பான இயக்கத்திற்குப் பிந்தைய கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக சிலாங்கூர் கொவிட் -19 சிறப்புக் குழு இந்த பரிசோதனை முயற்சியைத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமுதாயத் திரையிடல் சோதனைக்கு உட்பட்டவர்கள் இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி http://www.selangorprihatin.com வலைத்தளத்தின் மூலம் தங்கள் சொந்த ஆய்வு அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம் என்று அமிருடின் கூறினார்.