Home One Line P1 காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!

காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!

993
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்கள் இந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்று சிலாங்கூர் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமை ஆணையர் பாட்சில் அகமட் தெரிவித்தார்.

“விசாரணையின் அடிப்படையில், இப்பகுதி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காடு என்றும் அவர்கள் தற்காலிக குடியிருப்புகளை கட்டியதாகவும் தெரியவந்தது.”

#TamilSchoolmychoice

“அவர்கள் கூடாரங்களை அமைத்து, குளித்தல், சமையல் மற்றும் எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள்.” என்று செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர் உலு மாவட்ட பல்நோக்கு மண்டபம் மற்றும் விளையாட்டு வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அப்பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீறப்பட்டது குறித்த தகவல்களைத் தொடர்ந்து உடனடியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாட்சில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவருமே கிளந்தான், பகாங், பேராக் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 76 ஆண்கள், பெண்கள் (77) மற்றும் குழந்தைகள் (85) ஆவர்.

அவர்கள் அவ்வாறு செய்ததற்கான நோக்கம் குறித்து காவல் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பாட்சில் மேலும் கூறினார்.

“தடுத்து வைக்கப்பட்டவர்களை சுகாதார அமைச்சு மற்றும் சமூக நலத்துறை உடன் இணைந்து நாங்கள் பரிசோதனை செய்ய உள்ளோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 மற்றும் தொற்று நோய்கள் சட்டம் 1988- இன் பிரிவு 22 (பி) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.