Home One Line P1 பேராக், பெர்லிஸ், கெடா, கிளந்தான் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன!

பேராக், பெர்லிஸ், கெடா, கிளந்தான் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன!

573
0
SHARE
Ad
படம்: நன்றி ராயட்டர்ஸ்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, கொவிட் -19 பாதிப்பில்லாத பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 91- ஆக குறைந்துள்ளது.

பெந்தோங்கில் கொவிட் -19- இன் புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த வளர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை எட்டாகவே நிலைத்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போதைய சிவப்பு மண்டலங்களாக லெம்பா பந்தாய் (258 ), கூச்சிங் (143), கெப்போங் (84), திதிவாங்சா (74), குலுவாங் (70), சாமாராஹான் (54), ஜோகூர் பரு (46), திதிவாங்சா (74) மற்றும் உலு லங்காட்(50) உள்ளன.

பேராக், பெர்லிஸ், கெடா, கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் கொவிட் -19 சம்பவங்கள் இல்லாதவையாகும்.

நேற்று நண்பகல் நிலவரப்படி, நாட்டில் 6,071 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.