Home One Line P1 மே 4 முதல் சாலைத் தடுப்புகள் குறைக்கப்படும்!- மலேசிய காவல் துறை

மே 4 முதல் சாலைத் தடுப்புகள் குறைக்கப்படும்!- மலேசிய காவல் துறை

600
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற திங்கட்கிழமை தொடங்கி சாலைத் தடுப்புகளை மலேசிய காவல் துறை குறைக்கும் என்றும், மேலும் கூடல் இடைவெளி இணக்கத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் நுழைவு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

நேற்று அரசாங்கத்தின் கட்டுப்பாடுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்க இது உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல சாலைத் தடுப்புகள் சட்டவிரோத வழிகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் எனக் கண்டறியப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படும்.

#TamilSchoolmychoice

“இந்த அரசாங்கத்தின் சமீபத்திய உத்தரவுக்கு இணங்க, காவல் துறை மற்றும் மலேசிய ஆயுதப்படைகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அழைத்து வருவதற்காக கடற்கொள்ளையர்கள் (மனித கடத்தல்காரர்கள்) அடையாளம் கண்டுள்ள முக்கிய வழிகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும்.”

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுப்படி கொவிட் -19 பாதிப்பு பரவுவதை உறுதி செய்வதற்காக புதிய சாலைத் தடுப்புகள் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுவதால் இந்த வழிகள் கண்காணிக்கப்படும்” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் செயல்பட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை காவல் துறை வரவேற்பதாகவும், ஆனால் சமூக வணிக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்தும் என்றும் அப்துல் ஹாமிட் கூறினார்.