Home One Line P1 மலேசியாவில் ஒரு நாள் கொவிட்19 பாதிப்புகள் 55 ஆகக் குறைந்தன – மரணங்கள் நிகழவில்லை

மலேசியாவில் ஒரு நாள் கொவிட்19 பாதிப்புகள் 55 ஆகக் குறைந்தன – மரணங்கள் நிகழவில்லை

547
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று திங்கட்கிழமை (மே 4) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 55 ஆகக் குறைந்திருக்கிறது. நேற்று 122 ஆக இருந்த ஒருநாள் பாதிப்புகள் இன்று கணிசமாகக் குறைந்திருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 பாதிப்பால் யாரும் மரணமடையவில்லை என்ற ஆறுதலான செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,353 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

55 புதிய பாதிப்புகளில் 7, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பெறப்பட்ட பாதிப்புகளாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,484 ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுமையிலும் 1,764 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 28 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 13 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.