Home One Line P1 கொவிட்19: நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் புதிய இயல்பைப் பின்பற்ற வேண்டும்

கொவிட்19: நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் புதிய இயல்பைப் பின்பற்ற வேண்டும்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூகத்தில் கொவிட்19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் நோக்கத்தை அடைய பொது இணக்கம் மற்றும் சமூக ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நாட்டில் இந்த கொடிய தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் புதிய இயல்பைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“நம் அன்றாட வாழ்க்கையில் கூடல் இடைவெளி, கூட்டங்களைத் தவிர்ப்பது, சோப்பு மற்றும் தண்ணீரில் எப்போதும் கைகளை கழுவுவதை உறுதிசெய்வது, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய ஊக்குவிக்கப்படுவது போன்ற புதிய இயல்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இது சமூகப் பொறுப்பு, நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். வெளியில் முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லையென்றால் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

நூர் ஹிஷாம் அனைவரையும் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு கேட்டுக்கொண்டார்.

வணிகர்ள், தொழில்முனைவோர் மற்றும் முதலாளிகள் தரமான இயக்க நடைமுறை மற்றும் அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மே 4-ஆம் தேதி தொடங்கி பிரதமர் மொகிதின் யாசின் கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் நிபந்தனையுடன் செயல்படலாம் என்று அறிவித்திருந்தார்.