Home One Line P1 கட்டுப்பாட்டு ஆணை தளர்வு கண்ட போதிலும், மக்கள் வெளியேற தயக்கம்!

கட்டுப்பாட்டு ஆணை தளர்வு கண்ட போதிலும், மக்கள் வெளியேற தயக்கம்!

450
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கிவிட்ட போதிலும் மலையன் மென்ஷன் மற்றும் சிலாங்கூர் மென்ஷனின் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகிறார்கள்.

அரிசி, காய்கறிகள் மற்றும் பிற தேவைகள் போன்றவற்றை மளிகைக் கடை அல்லது அருகிலுள்ள பல்பொருள் அங்காடியில் வாங்க பெரும்பாலான மக்கள் வெளியே செல்கிறார்கள்.

சிலாங்கூர் மென்ஷன் குடியிருப்பாளர்களில் ஒருவர், லிம் கிம் கீ, முழுமையான கட்டுப்பாடு இப்பகுதியில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே, அருகிலுள்ள ஒரு பேரங்காடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வந்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் ஒரு முகக்கவசத்தை அணிந்துகொண்டு கிளம்புவதற்கு முன் கைகளை கழுவுவேன், ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி நான் பயப்படுகிறேன்.”

“நான் வெளியே சென்றாலும், ஒரு வாரத்திற்கான பொருட்களை வாங்கி விடுவேன். அதனால் நான் பல முறை வெளியே செல்ல வேண்டியதில்லை. குறைந்தபட்சம் நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை வெளியே செல்கிறேன், ”என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளை இப்பகுதியில் பல கடைகள் கடைபிடித்து செயல்படத் தொடங்கிவிட்டன.