Home One Line P1 கொவிட்19: 68 புதிய சம்பவங்கள் பதிவு- 57 பேர் மலேசியர்கள் அல்ல

கொவிட்19: 68 புதிய சம்பவங்கள் பதிவு- 57 பேர் மலேசியர்கள் அல்ல

510
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மே 8) நண்பகல் வரை மலேசியாவில் 68 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,535-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர்கள் கொவிட்19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,864-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தற்போது நாடு முழுமையிலும் 1,564 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 7 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.