Home One Line P1 அனைத்து பாதுகாப்பு காவலர்களும் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

அனைத்து பாதுகாப்பு காவலர்களும் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து பாதுகாப்பு காவலர்களும், குறிப்பாக பேரங்காடிகளில் பணிப்புரிபவர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

எந்தவொரு பேரங்காடியின் நுழைவாயிலிலும் இந்த குழு பொதுமக்களை எளிதில் அணுகக்கூடியவர்கள், இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.

“இன்று நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலாக்கம் தொடர்பான சிறப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.”

#TamilSchoolmychoice

“பாதுகாப்புக் காவலர்கள் பொதுமக்களுடன் நிறைய தொடர்புகளைக் கொண்டுள்ளனர், குறிப்பாக, பொதுமக்கள் பேரங்காடிக்குள் நுழையும்போது அவர்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதைக் கண்டறிவது கடினம்” என்று அவர் இன்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று, செராஸில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பாதுகாப்பு காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தொற்றுக் குழுவினரை சுகாதார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.