Home One Line P1 நாட்டில் 111 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன

நாட்டில் 111 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன

661
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முதன் முதலாக சிலாங்கூரில் கோலா லங்காட் கொவிட்19 பாதிப்பிலிருந்து மீண்டு பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட விளக்கப்படம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் முன்பாக நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

தற்போது, நாடு முழுவதும் 111 மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் எந்தவொரு கொவிட்19 சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை.

பேராக், பினாங்கு, பெர்லிஸ், கெடா மற்றும் கிளந்தான் ஆகியவை பச்சை மண்டல மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

40- க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்.

பெட்டாலிங், உலு லங்காட், கோம்பாக், பத்து, ஈபு கோத்தா, கம்போங் பாரு, ஸ்ரீ பெட்டாலிங் , குலுவாங், கூச்சிங் மற்றும் சாமாராஹான் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.