Home One Line P1 கொவிட்19: 54 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

கொவிட்19: 54 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

455
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று சனிக்கிழமை (மே 9) நண்பகல் வரை மலேசியாவில் 54 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,589-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர்கள் கொவிட்19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,929-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இத்தனை நாட்களாக ஓய்வின்றி பணியாற்றிய தாமும், சக பணியாளர்களும், இன்று ஒரு நாள் ஓய்வில் இருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது நாடு முழுமையிலும் 1,552 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 6 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், நாட்டில் மரண எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.