Home வணிகம்/தொழில் நுட்பம் தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக மாட்சிர் காலிட் நியமனம்

தேசிய மின்சார வாரியத்தின் தலைவராக மாட்சிர் காலிட் நியமனம்

640
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மொகிதின் யாசின் தலைமையிலான புதிய ஆட்சி அமைக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து, பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளுக்கு பெரிக்காத்தான் நேஷனல் சார்பு அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தேசிய மின்சார வாரியத்தின் (டிஎன்பி – தெனாகா நேஷனல் பெர்ஹாட்) புதிய தலைவராக டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் நியமிக்கப்பட்டிருக்கிறார். மே 12 முதல் இவரது நியமனம் நடப்புக்கு வரும்.

இவர் கெடாவிலுள்ள பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினராவார். அம்னோவைச் சேர்ந்தவர். அமைச்சரவையில் இடம் பெறாத அம்னோ-பெர்சாத்து தலைவர்களுக்கு தொடர்ந்து அரசாங்கத்துணை நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வழங்கும் போக்கை நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கம் பின்பற்றி வருகிறது.

#TamilSchoolmychoice

மின்சார வாரியத்தின் தலைவராக இதுவரையில் பணியாற்றி வந்த டான்ஸ்ரீ அகமட் பாட்ரி முகமட் சாஹிர் மே 1 முதல் ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக மாட்சிர் நியமனம் பெற்றிருக்கிறார்.

மாட்சிர் ஏற்கனவே அரசாங்கத்தில் ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் அமைச்சில் துணை அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

2005 முதல் 2008 வரை கெடா மந்திரி பெசாராக பணியாற்றிய அனுபவரும் மாட்சிருக்கு உண்டு.