Home One Line P1 குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்

குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொயோட்டா ஹைலக்ஸ் ஓட்டுனர் ஒருவர், மே 3-ஆம் தேதி கொவிட் -19 சாலைத் தடுப்பில், குடிபோதையில் வாகனம் ஓட்டி, அதன் விளைவாக காவல் துறை அதிகாரி ஒருவரை கொன்ற விவகாரத்தில் இன்று புதன்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

எவ்வாறாயினும், 44 வயதான கே.கலைச்செல்வன், மது போதையில் வாகனம் ஓட்டியமை, சாலைத் தடுப்பின் போது நிறுத்தத் தவறியது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை நீதிபதி முகமட் காப்லி சே அலி முன்னிலையில் மறுத்தார்.

காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலையில் சாலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காவல் துறை அதிகாரி சபுவான் முகமட் இஸ்மாயிலை மோதியதில் அவர் மரணமுற்றார்.

#TamilSchoolmychoice

சாலை போக்குவரத்துச் சட்டம் 1987- இன் பிரிவு 44- இன் கீழ் இந்த குற்றச்சாட்டு விதிக்கப்படுகிறது. அதே பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 10 வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்ச 8,000 ரிங்கிட் மற்றும் அதிகபட்சம் 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு, ஒரு காவல்துறை அதிகாரி கொடுத்த சமிக்ஞையை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது காவல் துறை சட்டம் 1967- இன் பிரிவு 26 படி குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிக்கு அதிகபட்சம் 12 மாத சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை.

அவர் காவல் துறை சட்டத்தின் பிரிவு 26 (1)- இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். அதே சட்டத்தின் பிரிவு 26 (2)- இன் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்படலாம். 300 ரிங்கிட்டுக்கு குறையாத மற்றும் 2,000 ரிங்கிடுக்கு மிகாத அபராதம் அல்லது அதிகபட்ச சிறைத்தண்டனை மூன்று மாதங்கள் அல்லது இரண்டும் தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றம் ஒருவர் உத்தரவாதத்துடன் கலைச்செல்வனுக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கியது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க வேண்டும். வழக்கு ஜூன் 18-ஆம் தேதி ஒத்திவைக்கபட்டுள்ளது.