கோலாலம்பூர்: பிப்ரவரி பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு மத நிகழ்ச்சியைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்19 பாதிப்பு மையமான ஸ்ரீ பெட்டாலிங், சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஸ்ரீ பெட்டாலிங் இப்போது 30 சம்பவங்களுடன் மஞ்சள் மண்டலமாக உள்ளது.
கோலாலம்பூரில் ஸ்ரீ பெட்டாலிங் மட்டுமல்ல, கடைசியாக சிகிச்சையில் இருந்த கொவிட் -19 நோயாளி குணமடைந்த பின்னர் புக்கிட் ஜாலில், மஞ்சள் மண்டலத்திலிருந்து பச்சை மண்டலத்திற்கு மாறியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், கோலாலம்பூரில் உள்ள புடு 10 புதிய சம்பவங்களைப் பதிவுசெய்த பின்னர் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அங்கு முட்கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இப்பகுதி இப்போது முழுமையான கட்டுப்பாட்டு நடைமுறையின் கீழ் உள்ளது.