Home One Line P1 மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதல்ல – வாதங்களை வழங்குகிறார் வழக்கறிஞர் கணேசன்

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதல்ல – வாதங்களை வழங்குகிறார் வழக்கறிஞர் கணேசன்

1275
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதல்ல எனக் கூறியிருக்கிறார்.

தனது சட்ட ரீதியானக் கருத்துகளை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் அடிக்கடி வெளியிட்டு வருபவர் கணேசன். மே 18 நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பில் தனது யூடியூப் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் ஏன் அந்தக் கூட்டம் சட்டபூர்வமானதல்ல என்ற விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்ற விதிகள், காலங் காலமாக பின்பற்றப்பட்டு வரும் பிரிட்டன் நாடாளுமன்ற மரபுகள் ஆகியவற்றுக்கு முரணாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக நாடாளுமன்றம் எப்படி நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்துக்கான சட்டவிதி 14 தெளிவாக விவரிக்கிறது. அதன்படி மாமன்னரின் உரைக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பட்டியலிட்டுத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதன்படிதான் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மாமன்னர் உரை முடிந்ததும் நாடாளுமன்றக் கூட்டத்தை சட்டவிதி 14-க்கு ஏற்பத்தான் நடத்த வேண்டும். இந்த விதிக்கு மாறாக நிகழ்ச்சி நிரலை மாற்றி நடத்த விரும்பினால் அதற்கு மக்களவைத் தலைவர் தீர்மானம் ஒன்றின் மூலம்தான் – பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலோடுதான் மாற்ற முடியும்.

மேலும் நாடாளுமன்றக் கூட்டம் 6 மாதங்களுக்கு மேல் ஒத்தி வைக்க முடியாது என்பதால் அதிலும் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக கணேசன் தெரிவித்துள்ளார்.

மலாய் மொழியில் அவர் வழங்கியிருக்கும் அந்த சட்ட விளக்கங்களைக் கீழ்க்காணும் யூடியூப் இணையத் தளத்தின் வழி காணலாம்.