Home One Line P1 “இன, மத அரசியல் வேண்டாம்; மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்” – மாமன்னர் அறிவுரை

“இன, மத அரசியல் வேண்டாம்; மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்” – மாமன்னர் அறிவுரை

614
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று காலை 10.15 மணியளவில் நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர், அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் போராட்டங்களில் இன, மத அரசியலைப் புகுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், மலாய் ஆட்சியாளர்களைச் சம்பந்தப்படுத்தும் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

தனது உரையின் தொடக்கத்திலேயே கொவிட்19 பாதிப்புகள் குறித்து விளக்கிய மாமன்னர், இந்தப் பிரச்சனையில் போராடும் முன்னிலைப் பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தன்னுடன் எழுந்து நின்று முன்னிலைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கைதட்டிப் பாராட்டு தெரிவிக்கும்படியும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அதன்படியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரோடு எழுந்து நின்று கைதட்டி தங்களின் பாராட்டுகளையும் நன்றியையும் கொவிட் 19 முன்னிலைப் பணியாளர்களுக்காகத் தெரிவித்துக் கொண்டனர்.

மாமன்னரின் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

  • துன் மகாதீர் தான் பதவி விலகப் போவதாக என்னிடம் வந்து தெரிவித்ததும் அவரை தொடர்ந்து பதவியில் நீடித்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். எனினும் அவர் மறுத்து விட்டார்.
  • அதைத் தொடர்ந்து மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேசி பெரும்பான்மை ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதை உறுதி செய்து அவரைப் பிரதமராகவும் நியமித்தேன்.
  • மொகிதின் யாசின் அரசாங்கம் நேர்மையுடனும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் நடந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
  • நாட்டின் ஒற்றுமை குலைந்திருப்பது கண்டும் நான் மிகவும் வருத்தமடைகிறேன்.

மேலும் தனதுரையில் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மாமன்னர் எடுத்துரைத்தார்.