கோலாலம்பூர்: ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பு சம்பந்தப்பட்ட மேம்பாட்டு திட்டமிடல் ஒப்புதலுக்காக வெகுமதியைப் பெற்றதற்காக முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட்டின் அரசியல் செயலாளர் வெள்ளிக்கிழமை காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தை காலிட் சமாட் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
“எனது முன்னாள் அரசியல் செயலாளர் ஹாஜி அஸ்லி, ஒரு ‘தரகர்’ மூலம் போலி ஒப்பந்தப் பத்திரத்தை வழங்கியதாக ஒரு கட்டடக்கலை நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று காவல் துறை தடுத்து வைத்தது.”
“அஸ்லி சார்பாக ஒப்பந்தப் பத்திரத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அந்த தரகர் வெகுமதி பெற்றார்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த விஷயத்தை வெளிப்படுத்திய காலிட், தரகர் காவல் துறையினரின் விசாரணையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
“இதை விட அதிகமாக என்னால் கூற முடியாது, ஏனெனில் வழக்கு இன்னும் காவல் துறை விசாரணையில் உள்ளது. இதன் மூலமாக தரகர் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை பெற்றதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.”
முன்னதாக, உள்ளூர் ஊடகங்கள் ஒரு கட்டிடக் கலைஞர் முறையே 66 வயதுடைய டத்தோ ஒருவருடன் கடந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் மேம்பாட்டு கட்டிட ஒப்புதல் பெற பேச்சு வார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டிருந்தன.