Home One Line P1 அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுகின்றனர்

அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுகின்றனர்

454
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக மாநில எல்லைகளைக் கடக்க முயன்றபோது காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

சனிக்கிழமை 1,248 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை 508 வாகனங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்பட்டன .

“பல்வேறு காரணங்களுக்காக அதிகமான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.”

#TamilSchoolmychoice

“சிலர் தங்கள் மனைவிகளை அழைத்துச் செல்லத் தயாராகி வருகின்றனர். ஆனால், சாலை தடுப்புகளில் அவர்கள் திருப்பி விடப்படுவார்கள்.”

“காவல் துறையினர் அவர்களை திரும்பி விடுகிறார்கள், இல்லையேல் தேவையிலாமல் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டால் இழப்பு அவர்களுக்குதான்.”

“குறிப்பாக மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்மாயில் சப்ரி தனது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகக் கூறினார், ஆனால், சமூகம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்கியும் மற்றும் கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் குறைந்துவிட்டால் இந்த கட்டுப்பாடு விரைவில் முடிவடையும் என்றும் கூறினார்.