Home One Line P1 கர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்

கர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்

564
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: அம்பாங்கிலிருந்து கிளந்தானுக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், சுகாதார காரணங்களுக்காக பயணிக்க காவல் துறையினரிடம் இருந்து அனுமதிப் பெற்றதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அவர் கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அந்த பெண் சில உறவினர்களை சந்தித்து கிராமத்திற்கு திரும்பும் வழியில் தொடர்பு கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர் கிராமத்தில் தன் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பினார். ஆனால், எதிர்பாராத வகையில் கொவிட்19-க்கு நேர்மறை அறிகுறிகள் கொண்டார்.”

“அவர் வீடு திரும்புவதற்கு முன்பு பலரை, அருகிலுள்ள மற்றும் தொலைதூர குடும்பங்களை சந்தித்தார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ” என்று இஸ்மாயில் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெண் நேர்மறையானவர் எனக் கண்டறியப்பட்டதால், முழு கிராமமும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. மேலும் அந்த பகுதி நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டது.