Home Photo News பாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது

பாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது

1321
0
SHARE
Ad

ஹைதராபாத் – தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லன் பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர் ராணா.

நீண்டகாலமாக பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் ராணா. ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் நெருக்கமாகப் பழகியவர். அவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கூட தகவல்கள் உலவின.

இறுதியில் தனது திருமணத்தை சில நாட்களுக்கு முன் அறிவித்தார் ராணா. மணப்பெண் வடிவமைப்பாளர் மிஹிகா பஜாஜ் என்பதையும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அந்த அறிவிப்புகள் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியிருக்கிறது.

அந்தத் திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்களை மணமக்கள் இருவருமே தங்களின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கொவிட்-19 பிரச்சனைகளால் இரகசியமாகவும் நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் விதமாக நடந்தேறியிருக்கிறது ராணாவின் திருமண நிச்சயதார்த்தம்.

ஹைதராபாத்திலுள்ள மறைந்த பிரபலத் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் படப்பிடிப்பு அரங்கத்தில் (ஸ்டுடியோ) இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக ராணாவின் தந்தை சுரேஷ் கூறியிருக்கிறார்.

ராணா திருமணம் செய்யப் போகிற மிஹிகா என்ற பெண்மணி யார் என சமூக ஊடகங்களில் பல இரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். மிஹிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்களையும் இங்கே காணலாம்:

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருடன் மிஹிகா