கோலாலம்பூர் – மலேசிய முஸ்லீம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24-ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.
மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் அரச முத்திரைக் காப்பாளரான டான்ஸ்ரீ சைட் டானியல் சைட் அகமட் இந்த அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை இரவு விடுத்தார்.
மாமன்னரின் உத்தரவுப்படியும், மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் டான்ஸ்ரீ சைட் டானியல் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. முஸ்லீம் அன்பர்கள் மாநிலம் விட்டு மற்ற மாநிலங்கள் செல்வதற்கும் கடுமையானக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன