Home One Line P1 ஓய்வு நாளிலும் மருத்துவமனைக்கு வருகை தந்த நூர் ஹிஷாம்

ஓய்வு நாளிலும் மருத்துவமனைக்கு வருகை தந்த நூர் ஹிஷாம்

705
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 24) நோன்புப் பெருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கும் விடுமுறை நாள்.

கொவிட்-19 பிரச்சனை தொடங்கிய நாள் முதல் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வரும் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், வழக்கம்போல் இன்றும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல், தனது குடும்பத்தினருடன் பெருநாளைக்கூட கொண்டாடி மகிழாமல், நேராக சென்றது புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு!

அங்கு பணியாற்றும் சுகாதார முன்னிலைப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவுதற்கும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் இன்றைய ஓய்வு நாளைப் பயன்படுத்திக் கொண்டார் நூர் ஹிஷாம். புத்ரா ஜெயா மருத்துவமனையின் முன்னிலைப் பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார் நூர் ஹிஷாம்.

#TamilSchoolmychoice

புத்ரா ஜெயா மருத்துவமனையின் முன்னிலைப் பணியாளர்கள் பலர் நூர் ஹிஷாமுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் புத்ரா ஜெயா மருத்துவமனையின் வசதிகளையும் நூர் ஹிஷாம் பார்வையிட்டார்.

இன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதிலும் 60 புதிய கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.