Home One Line P2 ஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எதிராக கண்ணீர் புகைக் குண்டு...

ஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டம் – ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எதிராக கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்

654
0
SHARE
Ad

ஹாங்காங் – கொவிட்-19 பிரச்சனைகளால் சில வாரங்களாக அமைதியாக இருந்த ஹாங்காங்கில் மீண்டும் வீதிப் போராட்டங்கள் தலையெடுத்துள்ளன.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனா. இதன் மூலம் ஹாங்காங்கின் சுயமான சுதந்திர ஆட்சியும், மனித உரிமைகளும் பாதிப்புகளைக் காணும் என பொதுமக்களிடையே அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன.

சாலைகளில் திரண்ட மக்கள் பேரணியாக நடந்து செல்ல முற்பட்டபோது அவர்களைக் கலைக்க அவர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்புகளால் 8 பேர்களுக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி இந்த பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரை நோக்கி பொருட்களையும் வீசத் தொடங்கினர்.

பேரணியின்போது சீன அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களும் முழங்கப்பட்டன.

சீனா கொண்டு வரும் புதிய சட்டத்தின் மூலம் முதன் முறையாக சீனாவின் பாதுகாப்பு இலாகாக்களும் இனி ஹாங்காங்கில் முதன் முறையாகச் செயல்பட முடியும். இதுவும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்புக்குக் காரணமாகும்.