கோலாலம்பூர்: நாட்டின் குடிநுழைவுத் துறை முகாம்களில் புதிய தொற்றுக் குழுக்கள் காரணமாக கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்தால், அரசாங்கம் நன்கு தயாராக உள்ளது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
குடிநுழைவுத் துறை முகாம்களிலிருந்து நோயாளிகளை தங்க வைக்க அரசாங்கம் மூன்று இடங்களை ஒதுக்கியுள்ளது. மொத்தமாக சுமார் 1,430 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மூன்று இடங்கள், மலேசியா விவசாய கண்காட்சி பூங்கா (MAEPS), சுங்கை பூலோ தொழுநோய் மையம் மற்றும் கோலாலம்பூரில் பயன்படுத்தப்படாத மகப்பேறு மருத்துவமனைகள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் தயார். இதுவரை, செர்டாங் விவசாயப் பூங்காவில் 230 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். இந்த இடம் 600 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும்.
“மொத்தத்தில், இந்த மூன்று வசதிகளும் 1,430 நோயாளிகளைக் கொண்டிருக்கலாம். எனவே சம்பவங்களில் அதிகரிப்பு இருந்தாலும், எங்களுக்கு போதுமான இடங்கள் உள்ளன, ” என்று அவர் நேற்றையப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.