Home One Line P1 முன்னணிப் பணியாளர்களின் முயற்சிகளை வீணடிக்க வேண்டாம்- நூர் ஹிஷாம்

முன்னணிப் பணியாளர்களின் முயற்சிகளை வீணடிக்க வேண்டாம்- நூர் ஹிஷாம்

548
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18 அன்று அமல்படுத்தப்பட்டதிலிருந்து மலேசியா நேற்று புதன்கிழமை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய கொவிட்19 நேர்மறை சம்பவங்களைப் பதிவு செய்தது.

நேற்றைய, செய்தியாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனை தெரிவித்தார்.

ஆயினும், கட்டுப்பாடு காலம் முழுவதும் ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை கூட்டாக மேம்படுத்துவதற்கும், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்கும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சகம் திடீரென கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்தால் அது கவலைக்குரியது என்று தெரிவித்தது. சமூகம் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல், நிறுவப்பட்ட நடைமுறைகளை மதிக்காமல் இருந்தால் நாட்டில் ஒரு புதிய அலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, மாநில எல்லைகளைக் கடக்கும் முயற்சி, சமூக நடவடிக்கைகள் மூலம் மக்கள் நடந்துகொண்டதைத் தொடர்ந்து கொவிட்19- இன் அதிகரிப்பு இருக்கும் என்று சுகாதார அமைச்சு கவலை கொண்டுள்ளது.

கொவிட்19 தொற்றுக்கு எதிரான போர் இன்னும் முடிவுக்கு வராததால், மக்கள் வழங்கப்படும் சுதந்திரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் கொவிட்19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சிரமம் பாராது பணியாற்றிய முன்னணிப் பணியாளர்களின் ஒவ்வொரு முயற்சியையும் வீணடிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.