Home One Line P1 மலேசியர்கள் வீட்டிலேயே இருந்ததால் மின்சாரக் கட்டணம் உயர்வு கண்டது

மலேசியர்கள் வீட்டிலேயே இருந்ததால் மின்சாரக் கட்டணம் உயர்வு கண்டது

652
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பல மலேசியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், அல்லது அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்தார்.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களில் உள்நாட்டு மின்சார கட்டணங்கள் கணிசமாக அதிகரித்தன என்று அவர் தெரிவித்தார்.

“குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை, இது நேரடியாக மின்சார பயன்பாட்டை அதிகரித்தது.

#TamilSchoolmychoice

“பள்ளி விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றவர்களும் இருந்தனர்.

“இது நகரத்தின் வீடுகளில் மின்சார பயன்பாடு குறைந்து, சொந்த ஊர்களில் பயன்பாடு அதிகரித்தது.” என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் மாட்சிர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில், குடியிருப்புகளில் மின்சார பயன்பாடு 20 விழுக்காடு முதல் 50 விழுகாடு வரை அதிகரித்துள்ளது என்று மாட்சிர் கூறினார்.

சில பயனீட்டாளர்கள் தங்கள் சாதாரண மாதாந்திர கட்டணங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் மின்சாரக் கட்டணங்கள் அதிகமாக இருந்தபோது அதிர்ச்சியடைந்தனர் என்று அவர் கூறினார்.