Home One Line P1 படப்பிடிப்பு: நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார்

படப்பிடிப்பு: நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார்

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: படக்குழுவினர் மற்றும் நடிகர்களிடையே, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளரை ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஆயினும், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர்  பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பகுதியில் நேர்மறையான கொவிட்-19 சிக்கல் இருக்கும்போது மட்டுமே பரிசோதனை அவசியம். எனவே  படப்பிடிப்பில் தொற்று இல்லை என்றால், கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

#TamilSchoolmychoice

“இருப்பினும், அவர்களின் பாதுகாப்புக்காக, படப்பிடிப்புக் குழு மற்றும் நடிகர்கள்  தன்னார்வ அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சிகையலங்கார நிபுணர்கள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என்று கோரி குறிப்பிட்ட நடைமுறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“பயன்படுத்தப்படும் உபகரணங்கள் (ஒப்பனை) ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும், மேலும் அவை பகிரப்படக்கூடாது. ” என்று அவர் கூறினார்.