புது டில்லி: இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அங்கு இரு தரப்புகளும் தொடர்ந்து தங்களது இராணுவப் படைகளைக் குவித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த லடாக்கில் வரும் சனிக்கிழமை (ஜூன் 6) இரு தரப்பும் சந்திக்க உள்ளன. இந்திய தரப்பு இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1962- ஆம் ஆண்டு இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான போர் நடந்தது. அந்தப் போரைத் தொடர்ந்து கடந்த 2017- ஆம் ஆண்டு கிழக்கு இமாலயப் பகுதியில் உள்ள டோக்லாமில் 3 மாதங்கள் இரு தரப்பு இராணுவங்களும் போரிட்டன.
அதற்கு பிறகு, இப்போது மீண்டும் எல்லைப் பிரச்சனை தலைத்தூக்கி உள்ளது.