Home One Line P1 கொவிட்19: புதிதாக 93 சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்

கொவிட்19: புதிதாக 93 சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்

519
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 7,970-ஆக உயர்ந்தது.

எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 93 பாதிப்புகளில், 91 சம்பவங்கள் பேர் வெளிநாட்டினர். 2 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று 61 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,531-ஆக உயர்ந்தது.

1,324 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், இருவர் சுவாசக் கருவி தேவைப்படுகிறது.