Home One Line P1 35 பில்லியன் ரிங்கிட் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

35 பில்லியன் ரிங்கிட் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

912
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிவித்தார்.

தேசிய பொருளாதாரப் புத்துயிர் திட்டத்தில், நிலையான பொருளாதார மீட்சியை அதிகரிக்க, 40 முன்முயற்சிகள் உள்ளடக்கிய 35 பில்லியன் ரிங்கிட் திட்டத்தை அவர் அறிவித்தார்.

இதில், 10 பில்லியன் நிதி நேரடி நிதி உதவி வடிவில் இருக்கும்.

#TamilSchoolmychoice

குறுகிய கால பொருளாதார மீட்புத் திட்டம் (ஈஆர்பி) எனக் கூறப்படும், “பெலன் ஜானா செமுலா எகோனோமி நெகாரா” அல்லது “பென்ஜானா” என்ற தலைப்பில், மக்களை மேம்படுத்துதல், வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதாரத்தை தூண்டுதல் எனும் மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை உள்ளடக்கிய 40 முன்முயற்சிகள் உள்ளன. பயிற்சித் திட்டங்கள், சமூக ஆதரவு, நிதித் திட்டங்கள், உள்நாட்டு பயனீட்டை அதிகரித்தல் மற்றும் கொவிட்19 பாதிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு துணைபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு துணைபுரிதல் இதில் அடங்கும்.

அரசாங்கம் முன்பு பிரிஹாதின் ராக்யாட் தூண்டுதல் தொகுப்பு மூலம் 260 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருந்தது. அதில் வங்கி கடன் ஒத்திவைப்பு, பண உதவி மற்றும் வணிகங்களுக்கான கடன்கள் ஆகியவை அடங்கியிருந்தது.