Home One Line P2 கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 400,000-ஐ நெருங்குகிறது

கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 400,000-ஐ நெருங்குகிறது

468
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள், உலகளவில் கொவிட்19 இறப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 5,000 சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.

இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 393,000-க்கும் மேற்பட்ட இறப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் மட்டுமே 108,000 இறப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

பிரேசில் இப்போது பிரிட்டன் மற்றும் இத்தாலியுடன் இணைகிறது. அங்கு 34,000- க்கும் அதிகமான கொவிட்19 இறப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 20,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் நோயாளிகள் இந்நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.