Home One Line P1 தேசிய கூட்டணி செயலகம் அமைக்கப்படவுள்ளது

தேசிய கூட்டணி செயலகம் அமைக்கப்படவுள்ளது

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்க மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணி பேசி வரும் நிலையில், முவாபாக்காட் நேஷனல் 15- வது பொதுத் தேர்தல் விரைவில் நடக்கும் என்று கணித்துள்ளது.

கட்சியின் வட்டாரத்தின் படி, கோலாலம்பூரில் அம்னோ தலைமையகத்தில் நேற்று இரவு 15-வது பொதுத் தேர்தல் நிரலைப் பற்றி விவாதிக்க முவாபாக்காட் நேஷனல் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றதாகக் கூறியது.

வட்டாரத்தின் கூற்றுபடி, அம்னோ மற்றும் பாஸ் அடங்கிய முவாபாக்காட் நேஷனல் நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் 15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறது.

#TamilSchoolmychoice

“நேற்றிரவு நடந்த கூட்டத்தில், விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் 15-வது பொதுத் தேர்தல் தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

“தேசிய கூட்டணி மற்றும் பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டவுடன் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கிடையில், பாஸ் மற்றும் அம்னோ இடையே தேர்தல் தொகுதி விநியோகம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தேசிய கூட்டணி செயலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

“தேசிய கூட்டணி செயலகம் விரைவில் உருவாக்கப்படும். இது நடக்கவிருக்கும் விவாதங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நிர்வகிப்பதற்கு உதவும். ” என்று அவர் கூறினார்.