Home One Line P2 இந்தியாவில் 9,971 புதிய பாதிப்புகள் – கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்தப்பட்டார்

இந்தியாவில் 9,971 புதிய பாதிப்புகள் – கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்தப்பட்டார்

729
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி நேற்று ஒரு நாளில் 9,971 பேர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 256,611ஆக இருக்கிறது. இதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 124,095 ஆக இருக்கின்றது.

இதுவரையில் 7,135 பேர் கொவிட்-19 தொடர்பான பாதிப்புகளால் மரணமடைந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை தொற்று எண்ணிக்கையில் எண்ணிக்கையில் இந்தியா மிஞ்சிவிட்டது. தற்பொழுது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா. பிரிட்டன் ஆகிய 4 நாடுகள் அதிக அளவில் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளை அடுத்து ஐந்தாவது நாடாக இந்தியா அதிக தொற்றுகளுடன் இருந்து வருகிறது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் கொவிட்-19 தொற்றா?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொவிட் -19 தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் எவ்வளவு தூரம் இந்தியாவில் ஊடுருவித் தாக்கத் தொடங்கி இருக்கின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல், தொண்டை எரிச்சல் கண்டிருப்பதைத் தொடர்ந்து அவருக்கும் கொவிட்-19 தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) காலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் அதன் பின்னர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அவருக்கு கொவிட்-19 தொற்று பரிசோதனைகள் நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.