Home One Line P1 46 இலஞ்சம், பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து மூசா அமான் விடுவிப்பு

46 இலஞ்சம், பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து மூசா அமான் விடுவிப்பு

691
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், இலஞ்சம் மற்றும் பணமோசடி ஆகிய 46 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜாமீல் ஹூசின் இன்று காலை நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரின்  விண்ணப்பத்தை அனுமதித்தார்.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூசா அமானை அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை இன்றி தற்காலிகமாக விடுவிக்க (DNAA- Discharge not amounting to acquittal) அரசு தரப்பு கோரியிருந்தது.

#TamilSchoolmychoice

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​மூசா அமான் வழக்கறிஞர், பிரான்சிஸ் எங் தனது கட்சிக்காரர் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்று குறிப்பிட்டதாகத் அந்த செய்தி ஊடகம் தெரிவித்தது.

“ஆம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் டான்ஸ்ரீ (மூசா) விடுவிக்கப்பட்டார்.” என்று எங் கூறியதாக அது குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, மூசா அமான் தம்மீது சுமத்தப்பட்டுள்ள 46 குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய விண்ணப்பம் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.