Home One Line P1 பள்ளி திறப்பு தேதி ஜூன் 10-இல் அறிவிக்கப்படும்

பள்ளி திறப்பு தேதி ஜூன் 10-இல் அறிவிக்கப்படும்

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனும் கேள்விக்கு பதில் நாளை புதன்கிழமை வழங்கப்படும் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லிமின் யாயா தெரிவித்தார்.

சுமார் 300,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், இன்று சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சும் இணைந்து தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் ஒரு சந்திப்பை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.

“இன்று நடக்க இருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று முடிவு செய்யப்படும். அடுத்த முக்கியமான அறிவிப்பாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக இதில் எஸ்பிஎம், எஸ்பிஎம், எஸ்டிஏஎம் மற்றும் எஸ் டிபிஎம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு முதல்கட்டமாக இடைநிலை பள்ளியின் மூத்த மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.