Home One Line P1 பொது இடங்கள், வணிக இடங்களை காவல் துறையினர் கண்காணிப்பார்கள்

பொது இடங்கள், வணிக இடங்களை காவல் துறையினர் கண்காணிப்பார்கள்

550
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை முதல் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும் நிலையில், காவல்துறையினர் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஆமோதித்து செயல்படுகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.

நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட்டிருந்த மாநிலங்களுக்கு இடையிலான சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் நீக்குவார்கள் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை அனுமதித்தார்.

#TamilSchoolmychoice

“காவல் துறை இனி வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று கவனிப்பார்கள்.” என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள், எதிர்மறையான முடிவுகளை கொண்டிருந்தால் 14 நாட்களுக்கு தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“தங்கும் விடுதிகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களும் இனி மூடப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.