Home One Line P1 கட்டுப்பாடு காலக்கட்டத்தில் குற்றச் செயல்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளன

கட்டுப்பாடு காலக்கட்டத்தில் குற்றச் செயல்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளன

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் நாட்டில் குற்ற விகிதங்கள் 46.7 விழுக்காடு குறைந்துள்ளது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட 84 நாட்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 10,134 ஆகும் என்றும், இதற்கு முன்பாக, இதே காலக்கணக்கில் 19,014 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

கொலை, கற்பழிப்பு மற்றும் கொள்ளை போன்ற வன்முறைக் குற்றங்கள் மற்றும் வாகன திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான சொத்துக் குற்றங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

” நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போது, ​​வழக்குகள் 46.7 விழுக்காடு அல்லது சுமார் 8,880 வழக்குகள் குறைந்துவிட்டன.” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், இரவு விடுதிகள், மற்றும் பொழுதுபோக்கு மையங்களின் உரிமையாளர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதை உணர்ந்து உத்தரவுக்கு இணங்குமாறு ஹுசிர் எச்சரித்தார்.